விருதுநகர், தூத்துக்குடி, திருச்சி, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் உள்ள 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு அறைகலன்கள் வாங்குவதற்கு 75 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் தற்போது 62 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இவற்றில் பெரும்பாலான நிலையங்களில் உள்ள வகுப்பறை அறைகலன்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதைனை கருத்தில் கொண்டு விருதுநகர், தூத்துக்குடி. திண்டுக்கல் உள்ளிட்ட 15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு புதிய அறைகலன்கள் வாங்க 75 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
THANK YOU...GTVSPIU
THANK YOU...GTVSPIU

No comments:
Post a Comment
Thank you