யாராவது ஒருவரது வாழ்வில் மாற்றத்தை கொண்டு வந்து வெற்றியடைய வைப்பேன். |
Emerging woman drives ignorance away,
And welcomes the bliss of life.
நான் விளக்காக இருப்பேன்,
நான் படகாக இருப்பேன்,
நான் ஏணியாக இருப்பேன்,
அடுத்தவரின் துன்பத்தை துடைப்பேன்,
மனநிறைவோடு வாழ்வேன்.
மாணவ நண்பர்களே, இன்றைக்கு குளித்தலை சுபசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பட்டப்படிப்பு தேர்வு நிகழ்ச்சியில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். பட்டப்படிப்பு முடிந்து தேர்ச்சி பெற்ற மாணவிக்களுக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், பயிலும் மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், கல்லூரி நிர்வாகத்தாருக்கும், பெற்றோர்களுக்கும், ஊழியர்களுக்கும் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.
இங்கு கூடியிருக்கும் மாணவிகளைப் பார்த்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் முகத்தில் மகிழ்ச்சியான புன்னகை தவழ்கறிது, உற்சாகம் வெளிப்படுகிறது. அவை அனைத்திற்கும் எனது வாழ்த்துக்கள். குளித்தலை வந்து உங்களை எல்லாம் சந்திப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
|
|
|
|
When I see large number of youth and students assembled here for the graduation day. I am reminded of the quote from Swami Vivekananda "Take up one idea. Make that one idea your life ? think of it, dream of it, live on that idea. Let the brain, muscles, nerves, every part of your body, be full of that idea, and just leave every other idea alone. This is the way to success." Dear friends, today I would like to talk on the topic "I am unique".
|
|
|
நீ நீயாக இரு. |
தினமும் வீட்டில் எரியும் மின்சார பல்பை பார்த்தவுடன் நம் நினைவுக்கு வருகிறார் தாமஸ் ஆல்வா எடிசன். தினமும் ஆகாயத்தில் சத்தத்தை எழுப்பி விண்ணில் பாயும் ஆகாய விமானங்களை பார்த்தவுடன் நம் மனதில் வருகிறார்கள் ரைட் சகோதரர்கள். நாம் உபயோகிக்கும் தொலைபேசி மற்றும் கைபேசியில் பெல் அடிக்கும் போது அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் நம் மனதின் அருகாமையில் தோன்றுகிறார். ஏன் கடலின் நிறமும், அடி வானமும் நீலமாக இருக்கின்றன என்ற கேள்வி எல்லோருக்கும் வரவில்லை, ஆனால் லண்டனில் இருந்து கொல்கத்தாவிற்கு பயணம் செய்யும் போது ஒரு விஞ்ஞானிக்கு அந்த கேள்வி வந்தது, அந்த கேள்விக்கான பதில்தான் ஒளிச்சிதறல் (Scattering of Light) , அது தான் சர்.சி.வி. ராமனுக்கு, ராமன் விளைவிற்கான (Raman Effect) நோபல் பரிசை பெற்று தந்தது. ரேடியத்தையும், அதன் அணுக்கதிர் வீச்சையும், அதனுடயை இயற்பியல் மற்றும் வேதியியல் கூறுகளை கண்டறிந்து தனது வாழ்வையே அற்பணித்த மேடம் க்யூரிக்குத்தான் இரண்டு ஆராய்ச்சி முடிவுகளுக்கு இரண்டு நோபல் பரிசுகள் கிடைத்தது. ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.
|
|
|
|
நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்களே! ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக. அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் நானாக இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
Friends, I have, so far, met 17 million youth in a decade's time. I learnt, "every youth wants to be unique, that is, YOU! But the world all around you, is doing its best, day and night, to make you just "everybody else". At home, dear young friends, you are asked by your parents to be like neighbours' children for scoring good marks. When you go to school, your teacher says "why not you become like the first five rankers in the class". Wherever you go, they are saying "you have to be somebody else or everybody else".
|
|
|
|
The challenge, my young friends, is that you have to fight the hardest battle, which any human being can ever imagine to fight; and never stop fighting until you arrive at your destined place, that is, a UNIQUE YOU!
அதாவது நீ நீயாக இரு, ஒவ்வொருவரும் ஒரு தனித்துவத்தோடு இருக்க வேண்டும், மற்றவர்கள் போல இருக்க வேண்டாம், என்பது தான் அதன் அர்த்தம்.
|
|
|
|
மன எழுச்சியடைந்துள்ள 60 கோடி இளைஞர்கள், இந்தியாவின் மிகப்பெரிய சொத்து நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறை எழச்சியுறவேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ மாணவியரின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும். அவ்வாறு வளர்த்தால் அது மாணவர்களின் படைப்புத்திறனையும் ஆக்கப்பூர்வமான உற்பத்தி திறனையும் வளர்க்கும். இந்தத் திறமை பெற்ற மாணவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் தன்னிச்சையாகவே கற்கும் திறனை அடைவர். உங்களுடன் இன்னும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
அன்பு மாணவச்செல்வங்களே, உங்கள் அனைவருக்கும் நான் எழுதிய கவிதையை இங்கே பகிர்ந்து கொள்ளவிரும்புகிறேன்.
|
|
|
|
நான் பறந்து கொண்டேயிருப்பேன் நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன் நான் பிறந்தேன் நற்பண்புகளுடன் நான் பிறந்தேன் கனவுடன், வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன் நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த நான் பிறந்தேன் ஆராயச்சி உள்ளத்துடன் நான் பிறந்தேன் ஆகாய உச்சியில் பறக்க நான் பூமியில் ஒரு போதும் தவழமாட்டேன், தவழவே மாட்டேன், ஆகாய உச்சிதான் என் லட்சியம், பறப்பேன், பறப்பேன், வாழ்வில் பறந்து கொண்டே இருப்பேன்.
|
|
|
|
பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும். அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும்.
நீ யாராயிருந்தாலும் உழைப்பால், அறிவால் வெற்றியடைவாய்
பினாச்சியோ என்ற கவிஞர் சொல்கிறார்.
நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்
நண்பர்களே, உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற 4 விஷயங்கள் அடிப்படையானவை. அவை என்ன. எங்கே என்னுடன் திரும்ப சொல்லுங்கள் பார்ப்போம்.
|
|
|
|
1. வாழ்க்கையில் மிகப் பெரிய லட்சியம் வேண்டும். சிறு லட்சியம் குற்றமாகும். 2. அறிவை தேடித் தேடிப் பெற வேண்டும். 3. லட்சியத்தை அடைய கடுமையாக உழைக்க வேண்டும். 4. விடாமுயற்சி வேண்டும். அதாவது தோல்வி மனப்பான்மைக்கு தோல்வி கொடுத்து வெற்றி பெறவேண்டும்.
இளைஞர்கள் தோல்வி மனப்பான்மையில் இருந்து, தவறான செய்திகளில் இருந்து, ஊழல் சிந்தனையில் இருந்து, நம்பிக்கையின்மையில் இருந்து விடுபட்டு, உங்கள் இலச்சியம் வெற்றி பெற நீங்கள் கனவு காணவேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் உங்கள் கனவு நனவாகும். அப்படிப்பட்ட கனவை ஒவ்வொரு இளைஞர்களின் மனதில் விதைக்க வேண்டும். எங்கே என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் பார்ப்போம்.
உறக்கத்திலே வருவதல்ல கனவு, உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு.
|
|
|
|
எனவே கனவு காண்பது என்பது ஓவ்வொரு இளைஞர்களின் வாழ்க்கையின் ஓரு முக்கியமான விஷயம். அப்படிப்பட்ட கனவுதான் உங்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை கொடுக்கும். எனவே அப்படிப்பட்ட தன்னம்பி்க்கை கொண்ட இளைஞர்கள் தான் எதிர்கால இந்தியாவை படைக்க 2020ல் வளர்ந்த தமிழகம், வளர்ந்த இந்தியாவை படைக்கும் நம்பிக்கை சின்னமாக உருவாவார்கள். எனவே ஒவ்வொரு இளைஞர்கள் மனதிலும் இலட்சிய விதை விதைக்கப்பட வேண்டும். அந்த இலட்சிய விதை தான், நாளைய வரலாற்றை உருவாக்கும் இலட்சிய சிகரமாக மாறும்.
நண்பர்களே, நான் ஓரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றி பாடிய கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு இலட்சியம். என்னுடன் எல்லோரும் திரும்ப சொல்கிறீர்களா.
இலட்சியம் நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன் எங்கிருக்கிறது இலட்சிய சிகரம் என் இறைவா நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன் எங்கிருக்கிறகு அறிவுப்புதையல் என் இறைவா நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன் எங்கிருக்கிறது அமைதித்தீவு என் இறைவா இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப்புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.
இந்தக் கவிதையின் கருத்தென்ன,
|
|
|
|
நாம் வாழ் நாள் முழுவதும் படித்துக்கொண்டு இருக்கிறோம், பணி செய்து கொண்டிருக்கிறோம். இவைகளைச் செய்யும் போது நமக்கு வாழ்வில் ஒரு இலட்சியம் வேண்டும். அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள் தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம் உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.
பூமியிலே, பூமிக்கு கீழே, பூமிக்கு மேலே உள்ள எந்த ஓரு சக்தியை காட்டிலும், மனஎழுச்சி கொண்ட இளைஞன் தான் மிகப் பெரிய சக்தி. இந்தியா 60 கோடி இளைஞர்களை பெற்ற நாடு. இளைய சமுதாயம் அதிகம் கொண்ட நாடு இந்தியா, எனவே மக்கள் தொகை ஓரு வகையில் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து.
|
|
|
|
பூமியில் பிறக்கும் எந்தக் குழந்தையும் வாழ்க்கையில மிகப் பெரிய அறிவாளியாகவும், விஞ்ஞானியாகவும், விளையாட்டு வீரனாகவும், கை தேர்ந்த கலைஞனாகவும், மிகச் சிறந்த எழுத்தாளனாகவும், கவிஞனாகவும், ஓர் தலைசிறந்த தலைவனாகவும், எல்லாவற்றிக்கும் மேலாக நல்ல மனிதனாக வரவேண்டும் என்பது தான் பெற்றோர்களது கனவாகும். அந்தக்கனவு நனவாவதற்கு அவர்களது பெற்றோர்களும், ஆசிரியர்களும், அந்தக் குழந்தைக்கு அறிவூட்டி, ஆற்றல் உற்றி வளர்க்க கூடிய சூழல் தான் அந்தக் குழந்தையை நல்லவர்களாகவும், அதே சமயம் வல்லவர்களாகவும், மாற்றுகிறது.
என்னுடைய கருத்து என்னவென்றால், உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும், இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு, அதை அடைய உழைப்பு முக்கியம், உழை, உழைத்துக்கொண்டே இரு. இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.
|
|
|
|
இத்தருணத்தில், காந்திஜி வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உங்கள் எல்லோரிடமும் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். காந்திஜியின் 9 வது வயதில் அவரது தாயார். அவருக்கு ஒரு அறிவுரையை தந்தார் அந்த அறிவுரையாவது.
மகனே, உனது வாழ்வில், துன்பத்தில் துவளும், யாராவது ஒருவரின் வாழ்வில் நீ ஏதேனும் ஒரு மாற்றத்தை உருவாக்கி, அவரை துன்பத்தில் இருந்து மீட்டெடுத்து முன்னேற்ற பாதையில் கொண்டு சென்றால், நீ மனிதனாக பிறந்ததின் பலன் உன்னை முற்றிலும் வந்தடையும். கடவுள் எப்பொழுதும் உனக்கு அருள் செய்வார்.
இந்த அறிவுரை, இந்த பூமியில் பிறந்த எல்லா மக்களும் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான அறிவுரை.
எனவே, மாணவர்களே, ஆசிரியர்களே, பெரியோர்களே, தாய்மார்களே, உங்கள் அனைவரையும் வாழ்த்தி, நல்ல கல்வியோடு, தன்னம்பிக்கையை உருவாக்கி, ஒவ்வொரு மாணவர்களும் உங்களுக்குகென்று மிகப்பெரிய இலட்சியத்தை உருவாக்கி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் துணையோடு, நாளை வரலாறை, சாதனையை பல்வேறு துறைகளில் உருவாக்கி வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
|
|
|
சமூகத்தின் அறிவார்ந்த மாற்றத்திற்கு தேவையான பொருளாதார வளர்ச்சி |
இந்தியா 2020 என்ற திட்டம், அடுத்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சியை 10 சதவீகிதத்திற்கு உயர்த்தி அதை நிலையில் நிறுத்த வழிவகை செய்யும் திட்டமாகும். அப்படி செய்யப்படுமேயானால் - வறுமையில் வாடும் மக்களை, அதில் இருந்து விடுவித்து மேல் தட்டிற்கு கொண்டு வந்து, வேலைவாய்ப்பை பெருக்கி, தனிநபர் வருமானத்தை உயர்த்தி, விவசாயத்தை பெருக்கி, கல்வி மற்றும் ஆராய்ச்சி, மருத்துவம், தண்ணீர், எரிசக்தி, நதிநீர் இணைப்பு, தொழில் வளர்ச்சி, நகர்புற வசதிகளை கிராமப்புறங்களுக்கு அளித்து ஒருங்கிணைந்த நீடித்த வசதிகளை கிராமப்புறம் பெற தேவையான பண்முக பொருளாதார வளர்ச்சியை அடைந்து, சமூக பொருளாதார வேறுபாடு அற்ற ஒரு அறிவார்ந்த சமுதாயமாக மாற்ற முடியும். இன்றைக்கு நாட்டில் தொடர்ந்து வரும் மத்திய அரசுகளும், பல்வேறு மாநிலங்களும் இந்த லட்சியத்தை அடைய முயற்சித்து வருகிறது. அது மட்டும் போதாது, நம் இளைய சமுதாயம் நம்பிக்கையுடன் உழைத்தால் அவசியம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெறும், இந்தியா வளர்ந்த நாடாக மாறும்.
2020ல் எப்படி இந்தியா ஒரு வளமான நாடாக மாறவேண்டும் என்ற எண்ணத்தை நான் பாராளுமன்றத்திலே உரையாற்றும் பொழுது தெரிவித்திருந்தேன். உங்கள் சிந்தனை ஒன்றுபட்டால், செயல் ஒன்றுபட்டால், 2020 இலட்சியம் நிறைவேறும்.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
|
|
|
|
1. கிராமத்திற்கும், நகரத்திற்கும் இடைப்பட்ட சமூக, பொருளாதார இடைவெளி குறைத்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 2. சுத்தமான தண்ணீர், அனைவருக்கும் தேவையான எரிசக்தி எல்லோருக்கும் சமமாக கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 3. விவசாயம், தொழில் மற்றும் சேவைத் துறைகள் ஒருங்கிணைந்து முன்னேற்றப் பாதைக்கு மக்களை அழைத்துச் செல்லும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 4. பண்பாடு நிறைந்த தரமான கல்வி, சமூக, பொருளாதார வேறுபாட்டை மீறி அனைவருக்கும் கிடைக்கும் நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 5. விஞ்ஞானிகளும், அறிவார்ந்த வல்லுநர்களும், தொழில் முதலீட்டார்களுக்கும் உகந்த நாடாக, ஏற்ற ஒரு நாடாக, இந்தியாவை மாற்ற வேண்டும் 6. தரமான மருத்துவ வசதி அனைவருக்கும், வேறுபாடு இல்லாமல் கிடைக்கக் கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 7. ஒரு பொறுப்பான, வெளிப்படையான, ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 8. வறுமை முற்றிலும் ஒழிக்கப்பட்டு, கல்லாமை கலையப்பட்டு, பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் இல்லாமல் ஒழிக்கப்பட்டு, சமுதாயத்தில் இருக்கும் யாரும் நாம் தனிமைப் படுத்தப் பட்டு விட்டோம் என்ற எண்ணம் இல்லாத நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 9. ஒரு இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதாரமான, வளமிக்க, வளர்ச்சி பாதையை நோக்கி பீறு நடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும் 10. உலகத்திலேயே வாழ்வதற்கு ஏற்ற அருமையான நாடாகவும், வளமான இந்தியாவை நோக்கி வழிநடத்தி செல்லக்கூடிய தலைவர்களை பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும்.
|
|
|
|
இப்படிப்பட்ட இந்தியாவைப் படைக்க எழுச்சிமிக்க எண்ணம் கொண்ட இளைஞர்கள் அனைத்து துறைகளிலும் தேவை. அந்த இளைஞர்கள் நாளைய தலைவர்களாக பரிணமித்தால் தான் இந்தியா, ஏற்றத்தாழ்வற்ற, சமத்துவ சமுதாயம் கொண்ட, நீடித்த வளர்ச்சி பெற்ற நாடாக மாறும்.
ஓவ்வொரு இளைஞர்களுக்கும் வாழ்வில் ஓரு இலட்சியம் வேண்டும், அந்த இலட்சியம் நிறைவேற கடுமையாக உழைக்கவேண்டும், தொடர்ந்து அறிவைப்பெற, அதை தேடி சென்றடையவேண்டும், விடா முயற்சி வேண்டும், அதாவது தோல்வி மனப்பான்மையை தோல்வியடையச் செய்ய வேண்டும். இந்த நான்கு குணங்களும் இருந்தால் கனவு நனவாகும்.
|
|
|
|
Dear students, every one of you think of yourself, your career whether it is in science, arts, literature, humanities, business, management, social entrepreneurship, politics, law and executive, whatever the field that you choose, you have a responsibility to contribute and you can always say, think and act on one thing, what is that one thing ? that is what the spirit of "what I can give?" Under any circumstances, if everyone of you acquire the quality of saying "What I can give? Then you have arrived, we have arrived and India arrived in realizing the Developed India vision 2020.
Today Women youth brigade assembled here, can you all take an oath because every one of us belongs to a family. The youth brigade of the country can promote the corruption free families in every family of the nation. Hence all of you repeat with me the following oath:
|
|
|
|
1. We the youth of the nation decide, today onwards we will ensure that our families are free from corruption.
2. We will persuade our parents through the unique tool of love and affection to lead righteous way of life in our family.
3. We will Work with integrity and succeed with integrity
4. I can do it, we can do it and India can do it.
5. My national Flag flies in my heart, we will make the nation great.
|
|
|
Compassionate Leadership |
Sometime back, I was reading a book called "Everyday Greatness". I would like to share one event which is essential component of our development today. Today, what we need is a leadership with compassion. Let me narrate one experience which happened in Mexico.
A riot was raging in La Mesa Prison in Mexico. Twenty five hundred prisoners were packed into a compound, which had been built for only six hundred. They angrily hurled broken bottles at the police who fired back with machine guns. Then came a startling sight. A tiny five feet two inches, sixty three year old woman, calmly got into the crowd, with outstretched hands, in a simple gesture of peace. Ignoring the shower of bullets, she stood quietly and asked every one to stop. Incredibly every one did. No one else in the world, but Sister Antonia could have done this. Why did the people listen to her? All because of her decades of service to the prisoners by her choice. She sacrificed all her life for the sake of prisoners lived in the midst of murderers, thieves and drug lords all of whom she called her sons. She attended their needs round the clock, procured antibiotics, distributed eyeglasses, washed bodies for the burial and counseled the suicidal. This selfless act of love and compassion generated the respect among the prisoners to control themselves and urged them to do what she wanted them to do.
|
|
|
Emerging women |
When I am with the students and teachers, I would like to share with you the thought process of the great poet Mahakavi Subramanya Bharathiyar on this occasion who in 1910 composed the poem envisioning women of India. When I visited his granddaughter Smt. Lalitha Bharathiyar at Chennai, she recited the great song of 1910 on emerging women of poets visualization :
|
|
|
|
உதய கன்னி
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவல மெய்திக் கரையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகும்
உதய கன்னி யுரைப்பது கேட்டீரோ
|
|
|
|
This beautiful poem brings out the profile of emerging women.
Emerging Women
She walks with raised head,
With her eyes looking straight,
She has her principles,
Unafraid of anybody!
She has a lofty
And knowledge based pride,
Such cultured women,
Don't falter from the chosen path.
She drives ignorance away.
She welcomes the bliss of life.
With learned mind,
This is the Dharma
Of emerging woman.
|
|
|
|
The dream of the poet, I am sure, will become a reality of life for the students. When the child is empowered by the parents, at various phases of growth, the child transforms into a responsible citizen. When the teacher is empowered with knowledge and experience, good young human beings with value systems take shape. When individual or a team is empowered with technology, transformation to higher potential for achievement is assured. When the leader of any institution empowers his or her people, leaders are born who can change the nation in multiple areas. When the women are empowered, society with harmony in the home is assured. When the political leaders of the nation empower the people through visionary policies, the prosperity of the nation is certain.
|
|
|
Conclusion: What I will be remembered for? |
Friends, finally I would like to ask you, what would you like to be remembered for? You have to evolve yourself and shape your life. You should write it on a page. That page may be a very important page in the book of human history. And you will be remembered for creating that one page in the history of the nation ? whether that page is the page of invention, the page of innovation or the page of discovery or the page of creating societal change or a page of removing the poverty or the page of fighting injustice or planning and executing mission of networking of rivers. I will be happy if you could write this page and mail it to me (apj@abdulkalam.com).
Once again, let me greet all the graduating students from Subashakthi College of Arts & Science for Women, Kulithalai on the Graduation Day. My best wishes to all of you for success in your educational mission and life.
May God bless you.
|
|
|
Oath for the Students |
1. I will bring a change in the life of 100 women in education, employment or healthcare.
2. I will promote courage and self reliance, particularly among women.
3. I will work continuously to remove gender discrimination and crime against women and children.
4. I will promote righteousness in the heart that will blossom the beauty in the character among citizens.
5. I will light the lamp of knowledge in the nation and ensure that it remains lit for ever.
6. Wherever I am, I will always be remembered by my thought, word and action as a student or alumni of Subashakthi College of Arts & Science for Women.
7.My national Flag flies in my heart and I will bring glory to my nation.
By, Dr. APJ Abdulkalam |
www.abdulkalam.com |
|
|
No comments:
Post a Comment
Thank you