Thursday 2 May 2013

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி ..........அம்மாஅவர்களுக்கு நன்றி....நன்றி...நன்றி

        bullet [Press Release No.110] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )          

 click the link>>>>>>>  http://www.tn.gov.in/seithi_veliyeedu/pr02May13/pr020513_110_1.pdf

                                  

தமிழக அரசு ஊழியர்களுக்கு 8% அகவிலைப்படி 

உயர்த்தி முதல்-அமைச்சர் ஜெயலலிதாஅவர்கள் 

உத்தரவிட்டுள்ளார்.




                                             அம்மாஅவர்களுக்கு நன்றி....நன்றி...நன்றி                     

                   

  

j.jayalalitha
சட்டசபையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் ஒரு அறிக்கை வாசித்தார். அதில் அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தும் கல்வியையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் சேவைப் பணியை மேற்கொள்பவர்கள் ஆசிரியர்கள். இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாடீநுந்த பணியினை மேற்கொள்ளும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வாடிநவாதாரத்தை மேம்படுத்தும் வகையிலும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1.1.2013 முதல் அவர்களுடைய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்தி, தற்போதுள்ள 72 விழுக்காடிலிருந்து 80 விழுக்காடாக வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது போல், தமிடிநநாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியையும், அவர்களது அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் எட்டு விழுக்காடு உயர்த்திட நான் உத்தரவிட்டுள்ளேன் என்பதை மகிடிநச்சியுடன் இந்த மாமன்றத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள்; ஆசிரியர்கள்; வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள்; அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள்; ஊராட்சி உதவியாளர்; எழுத்தர்; ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும். இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் என சுமார் 18 லட்சம் பேர் பயனடைவார்கள். இந்த அதிகரிக்கப்பட்ட அகவிலைப்படி 1.1.2013 முதல் கணக்கிடப்பட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 1,639 கோடியே 93 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

No comments:

Post a Comment

Thank you

National Anthem



ALL PHOTOS CLICK ME

APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY
APPRENTICE MELA ALL PHOTO'S  -2019 . GOVT ITI TRICHY

J.ELANGOVAN.A.T.O.GOVT.ITI.TRICHY